பாதுகாப்புத் தரப்புக்கு அமைவாக, 2019 ஏப்பிறல் 21ஆம் திகதி நாட்டின் பல பாகங்களில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் புதிய வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வு விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அத்தகைய புதிய வெடிபொருட்களைக் கண்டுபிடிப்பதற்கு புதிய செயல்முறையொன்றை விருத்திசெய்வதற்கு உதவுவதன்மூலம் நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு முன்வந்துள்ளது.
இந்த நோக்கத்திற்காக, அமெரிக்காவிலிருந்து தொழில்நுட்ப உதவிகள் பெறப்படவுள்ளது. இது சம்பந்தமான முதல் சுற்று பேச்சுவார்த்தை ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்டத்திற்கான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுஜீவ சேனசிங்க அவர்களின் தலைமையில் 2019.05.23ஆம் திகதி அமைச்சில் நடைபெற்றது.
அமைச்சின் செயலாளர், திரு. சிந்தக லொகுஹெட்டி, அமைச்சு அதிகாரிகள், அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதானி, திரு. ரொபர்ட் ஹில்டன், சிரேஷ;ட பொலிஸ் அதிகாரிகள், விசேட செயலணி அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையின்போது பிரசன்னமாகியிருந்தனர்.




