இலங்கைக்கும் கொரிய குடியரசுக்கும் இடையிலான பொருத்தமான தொழில்நுட்ப அபிவிருத்தி கருத்திட்டம் மிக வெற்றிகரமாக நிறைவடைந்ததை முன்னிட்டு பத்தரமுல்ல வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் 2019.12.10ஆம் திகதி இலங்கைக்கான கொரிய தூதுவர் திரு. லீ ஹியோங அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற நிறைவு வைபவத்தில் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் திலங்க சுமதிபால பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இந்த பொருத்தமான தொழில்நுட்ப அபிவிருத்தி கருத்திட்டம் 2017ஆம் ஆண்டு, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்குகின்ற, விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இணைப்பாக்க செயலகம் (ஊழுளுவுஐ), கொரிய புலமைச்சொத்து அலுவலகம் (முஐPழு) மற்றும் கொரிய புத்தாக்க ஊக்குவிப்பு சங்கம் (முஐPயு) என்பவற்றின் கூட்டிணைவுடன் முன்னெடுக்கப்பட்டது. கொரிய குடியரசின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் இந்த கருத்திட்டத்தின் கீழ் நாட்டின் சமூக தேவைகளை நிறைவுசெய்கின்ற இரண்டு விசேட கருத்திட்டங்கள் பூர்த்திசெய்யப்பட்டன.

அவற்றில் முதலாவது நோய்க் காரணி கண்டறியப்படாத நீண்ட நாள் சிறுநீரக நோயுள்ள (ஊமுனுர) பிரதேசங்களில் மூன்று நீர் சுத்திகரிப்பு பொறித்தொகுதிகளை அமைத்தலாகும். இவற்றில் முதலாவது நீர் சுத்திகரிப்பு பொறித்தொகுதி அனுராதபுர மாவட்டத்தில் பலகல என்ற இடத்தில் அமைக்கப்பட்டது. ஏனைய பொறித்தொகுதிகளுக்கான இயந்திர உபகரணங்கள் கொரிய குடியரசினால் ஏற்கனவே இலக்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த பொறித்தொகுதிகள் ஆராச்சிகட்டுவ மற்றும் கலென்பிந்துனுவௌ ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்படவுள்ளன.

இரண்டாவது விசேட கருத்திட்டம் கழிவு தேங்காய்ப்பூவிலிருந்து தேங்காய் எண்ணெயைப் பிரித்தெடுப்பதற்கான குறைந்த செலவு இயந்திரங்களை அறிமுகப்படுத்துதலாகும். இந்த இயந்திரங்களில் ஒன்று குளியாபிட்டிய மேற்கில் பொருத்தப்பட்டுள்ளது. ஏனைய இரண்டு இயந்திரங்கள் தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்திலும் (Nநுசுனு) கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்திலும் (ஐவுஐ) பொருத்தப்பட்டுள்ளன.
இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சிந்தக எஸ் லொகுஹெட்டி, கொரிய புலமைச்சொத்து அலுவலகத்தின் (முஐPழு) பிரதிப் பணிப்பாளர் திரு. கிம் ஹியுவென்ட், கொரிய புத்தாக்க ஊக்குவிப்பு சங்கத்தின் (முஐPயு) துணைத் தலைவர் திரு. லீ டுசெங் மற்றும் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.





