கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் கௌரவ அமைச்சர் திரு. டக்ளஸ் தேவானந்தா, தொழில்நுட்ப புத்தாக்க கௌரவ இராஜாங்க அமைச்சர் திரு. திலங்க சுமதிபால ஆகியோரின் பங்கேற்பின் கீழ் இன்று (26.12.2019) காலை யாழ்ப்பாண பல்கலைக்கழக விளையாட்டரங்கில், ஒன்பது வருடங்களுக்குப் பின் இலங்கையில் தென்பட்ட கோள சூரிய கிரகணத்தை (முழு சூரிய கிரகணம்) அவதானிக்கும் முகாம் நடத்தப்பட்டது.
இதற்கு முன் சூரிய கிரகணம் 2010ஆம் ஆண்டு தோன்றிது. அடுத்த சூரிய கிரகணம் 2031ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி தோன்றவிருப்பதால் இது இலங்கை வாழ் பொதுமக்களுக்கு மிகவும் விசேடமான நிகழ்வாகும். இது வட பகுதியில் தெளிவாக தென்படுவதன் காரணமாக அப்பகுதியில் பல அவதானிப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சியில் உள்ள பொறியியல் பீடம் மற்றும் முல்லைத்தீவு கரையோரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன.
தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சிந்தக லொகுஹெட்டி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பி. இரவிராஜனா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.




