உலக தரத்திற்கு இலங்கையின் மர மற்றும் வெட்டுமர கைத்தொழிலை உயர் தொழில்நுட்பத்துடன் உலக ஏற்றுமதி சந்தைக்கு மாற்றுவதற்கும் புத்தாக்கத்தின் ஊடாக மர மற்றும் வெட்டுமரங்களை அடிப்படையாகக் கொண்ட உயர்ந்த நிலையமாக மொறட்டுவவை மாற்றுவதற்கும் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க கௌரவ அமைச்சர் திரு. திலங்க சுமதிபால அவர்களின் பங்கேற்பில் மொறட்டுவ வெட்டுமர கைத்தொழிலின் அடையாளத்தை மேம்படுத்தும் நோக்கில் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் 'மொறட்டுவ லீ ' வணிகப் பெயரை ஆரம்பிக்கும் நிகழ்வு கட்டுபெத்த தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கை வெட்டுமர கைத்தொழிலுக்கு பெறுமதி சேர்ப்பதற்காக தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்குகின்ற விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இணைப்பு செயலகம் (COSTI), மொறட்டுவ மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்கள் என்பவற்றின் கூட்டிணைவுடன் வெட்டுமர வடிவமைப்பு நிலையம் (TDIC) மற்றும் வெட்டுமர பதனிடும் புத்தாக்க நிலையம் (TPIC) என்பவை அமைச்சரவை அங்கீகாரத்துடன் ஸ்தாபிக்கப்படவுள்ளன. இந்த நிலையங்களின் வெற்றிகரமான அமுலாக்கம் இலங்கையின் மர மற்றும் வெட்டுமரங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளையும் புத்தாக்க வடிவமைப்புகளையும் போட்டி ரீதியான உலக சந்தைக்கு அறிமுகப்படுத்தக்கூடியதாக இருக்கும். அத்துடன் எதிர்காலத்தில் இலங்கையின் வெட்டுமர கைத்தொழிலின் அபிவிருத்திக்கு முழுமையான சேவை நிலையமாகவும் சேவையாற்றும்.
தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்குகின்ற தானியங்கி இயந்திரமுறை பயன்பாட்டுக்கான முதன்மை நிலையத்தின் (CERA) குறைபாடுகளைக் கண்டறிவதற்காகவும் அதை உயர்ந்த நிலைக்கு மாற்றுவதற்காகவும் சிறு மற்றும் நடுத்தர வியாபார மற்றும் பொறுப்புமுயற்சிகள் அமைச்சரும் கைத்தொழில் மற்றும் விநியோக இணைப்புத் தொடர் முகாமைத்துவ கௌரவ அமைச்சருமான திரு. விமல் வீரவன்ச மற்றும் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க கௌரவ அமைச்சர் திரு. திலங்க சுமதிபால ஆகியோர் பரிசீலிப்பு விஜயமொன்றை மேற்கொண்டனர்.
அரசாங்கம் தானியங்கி இயந்திரமுறை பயன்பாட்டுக்கான முதன்மை நிலையத்தினை கைத்தொழில் ஏற்றுமதி சபை வளாகத்திற்கு விரிவுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. அத்துடன், அது இப்பொழுது ஸ்தாபிக்கப்பட்டுள்ள முழு காணிக்குமான தேர்ச்சியான அபிவிருத்தி திட்டத்தைத் தயாரிப்பதற்கும் உடன்பட்டுள்ளது. கைத்தொழிலுக்குத் தேவையான மூலப் பொருட்களை உற்பத்திசெய்வதற்கும் அதன்மூலம் உயர் உற்பத்தி கொள்ளளவை அடைவதற்கும் நாட்டின் கைத்தொழிலில் அபிவிருத்தியை அடைவதற்கும் தானியங்கி இயந்திரமுறையை அதிகளவில் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கம் என கௌரவ அமைச்சர் திலங்க சுமதிபால கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், முதலீடு செய்யப்பட்ட பணத்திற்கு ஆகக்கூடிய பயனைப் பெறுவதற்காக அரச மற்றும் தனியார் துறைகளின் உற்பத்தி கொள்ளளவை அதிகரிப்பதற்கு இச் செயற்பாடு பயன்படுத்தப்படும் என்று கூறினார்.
தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க கௌரவ இராஜாங்க அமைச்சர் திரு. திலங்க சுமதிபால, டெங்கு அச்சுறுத்தலை தடுப்பதற்கு ஆளில்லா விமான (ட்ரோன்) தொழில்நுட்பத்தையும் முன்னணி தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவதற்கு ஒரு விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு உடன்பட்டுள்ளார். இது தொடர்பான முதல் கலந்துரையாடல் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சில் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் கௌரவ திலங்க சுமதிபால அவர்களின் தலைமையில் நடைபெற்றது. டெங்கு அச்சுறுத்தல் இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு செயல்முறை நடவடிக்கைகளை எடுப்பதற்கு இருதரப்பினர்க்கிடையில் கொள்கை உடன்படிக்கையொன்றை செய்துகொள்ளுவது இக்கலந்துரையாடலின் நோக்கமாகும்.
தொடர்ந்து உரையாற்றிய திரு. சுமதிபால, 'டெங்கு நோயை இல்லாதொழிப்பதற்கு நாம் அவ்வப்போது எமது தொழில்நுட்ப உதவியை வழங்க முடியும். இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கம் இதைத் தடுப்பதற்கு சுகாதார அமைச்சுக்கு தொழில்நுட்ப உதவி வழங்குவதாகும். நவீன தொழில்நுட்பத்திற்கான ஆர்தர் சி. கிளார்க் நிலையம், நெனோ தொழில்நட்பத்திற்கான இலங்கை நிறுவகம் மற்றும் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகம் உள்ளிட்ட ஏனைய ஆராய்ச்சி நிறுவகங்கள் நவீன தொழில்நுட்பத்தின் முன்னணி உதவியை வழங்குவார்கள். தேசிய கருத்திட்டம் என்ற வகையில், நாங்கள் மிக முக்கிய தரப்பினருடன் ஈடுபடுவோம். மேலும் டெங்கு வைரசை கண்டுபிடிப்பதற்கு குறைந்த செலவு பரிசோதனைக்கு தொழில்நுட்ப கருவியை விருத்திசெய்யும்படியும் நுளம்புகளைத் துரத்தும் துணிகள் உட்பட டெங்கு நுளம்புகள் பற்றி விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சியை மேற்கொள்ளும்படியும் நாம் ஆராய்சியாளர்களை ஊக்கப்படுத்துகிறோம். டெங்கு நோயினால் மனித உயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை கவனத்தில் எடுத்துக்கொள்ளும்போது டெங்குவை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிக்கு நிதியுதவி அளிப்பது பிரச்சினையாக இருக்காது. இதற்கு நன்கொடையளிப்பதற்கு நாம் பூரண ஒத்துழைப்பு நல்குவோம். "டெங்கு நோயற்ற நாடு" என்ற பெயர் சுற்றுலாத் துறையின் அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானதாகும்.' எனக் கூறினார்.
டெங்கு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், காலத்திற்குக் காலம் டெங்கு நோய் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது. எனவே அதைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை உருவாக்குவதற்கு தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சின் தொழில்நுட்ப நிபுணர்களைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். மேலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சினையில் தனித்தனியாக ஈடுபடுவதை விட அதில் ஈடுபடும் தரப்பினர் ஒன்றாக இணைந்து தமது அறிவைப் பகிர்ந்துகொள்ளுவதன் மூலம் இதை வினைத்திறன் மிக்கதாக்கிக்கொள்ள முடியும்.
ஆளில்லா விமான (ட்ரோன்) தொழில்நுட்பத்தின் வழியாகப் பெறும் படங்கள் மற்றும் காணொளிகள் (வீடியோ) என்பவற்றைப் பயன்படுத்துவதன் சாத்தியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது காற்றின் வேகம், டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு காரணமாய் இருக்கின்ற கட்டிட நிர்மாண வேலைத்தளங்கள், மத ஸ்தலங்கள், பாடசாலைகள் போன்ற அரச மற்றும் தனியார் நிறுவகங்கள் என்பவை தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. வரைபடங்களை உருவாக்குவதற்கு புவியியல் தகவல் முறைமையொன்றை உருவாக்குதல், நெனோ தொழில்நுட்பம் ஊடாக நுளம்புகள் கவரப்படும் இடங்கள் மற்றும் நுளம்புகள் பெருகும் முறைகள் என்பவையும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விசேட தலைப்புகளாகும்.
இந்த கருத்திட்டத்திற்கு ஒரு விசேட குழுவை அமைக்கும்படி அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சிந்தக லொகுஹெட்டி, நவீன தொழில்நுட்பத்திற்கான ஆர்தர் சி. கிளார்க் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சனத் பனவன்னகே, நெனோ தொழில்நுட்ப நிலையத்தைச் சேர்ந்த திரு. மஞ்சு குணவர்தன, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் தேசிய டெங்கு ஒழிப்பு அலகு என்பவற்றின் உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் மற்றும் சுகாதார அமைச்சின் சார்பில் பொது சுகாதார பரிசோதர்கர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இணைப்பாக்க செயலகம் மற்றும் இலங்கையின் தேசிய புலமைச் சொத்து அலுவலகம் என்பவற்றுடன் இணைந்து, உலக புலமைச் சொத்து நிறுவனம் மற்றும் ஜப்பான் ஆக்கவுரிமை அனுமதிப்பத்திர அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்த ஆக்கவுரிமை அனுமதிப் பத்திரம் தேடுவது தொடர்பான திறன்விருத்தி மற்றும் பயிற்சி செயலமர்வு இன்றைய தினம் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால அவர்களின் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.
உலக புலமைச் சொத்து அலுவலகத்தினால் 2017ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட 6 வருட கால வரையறையைக் கொண்ட Enabling IP Environment (EIE) கருத்திட்டத்தின் கீழ் இந்த செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டது. புலமைச் சொத்து தொடர்பான கொள்கை அபிவிருத்தி, தொழில்நுட்ப அனுமதிப்பத்திரங்களை வழங்குதல், தொழில்நுட்ப மதிப்பீடு, சந்தைப்படுத்தல் போன்றவை உள்ளடங்கிய புலமைச் சொத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்ப ஒப்படை தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் செயலமர்வுகள் இந்த கருத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.
தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க கௌரவ இராஜாங்க அமைச்சர் திரு. திலங்க சுமதிபால, தானியங்கி இயந்திர பயன்பாட்டுக்கான அதிசிறந்த நிலையத்தை (CERA) உயர் தொழில்நுட்ப நிலையமாக வெற்றிகரமாக மாற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டு அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்வதில் தான் நேரடியாகத் தலையிடுவதாகக் கூறினார். தற்போதைய அரசாங்கத்தில் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க கௌரவ இராஜாங்க அமைச்சின் விடயப்பரப்பின் கீழ் இயங்குகின்ற மேற் குறிப்பிட்ட நிலையத்திற்கு விஜயம்செய்தபோது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் விபரிக்கும்போது,
"இந்த நிறுவகம் பல வருடங்களுக்கு முன்னர் அரச - தனியார் பங்காண்மை கருத்திட்டமாக முன்னெடுக்கப்பட்டது. இப்பொழுத அது இயங்காத நிலையில் இருக்கிறது. அதிமேதகு சனாதிபதி இந்த நிறுவகத்தை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இது முன்னைய அரசாங்க காலத்தில் பல்வேறு அமைச்சுகளின் கீழ் இயங்கியது. இப்பொழுது எமது அமைச்சின் விடயப்பரப்பின் கீழ் இயங்குகிறது.
அடுத்து வரும் இரண்டு வருடங்களில் இந்த நிலையத்தை தானியங்கி இயந்திர பயன்பாட்டுக்கான அதிசிறந்த நிலையமாக்குவதற்கு எம்மால் இயலுமான அனைத்தையும் மேற்கொள்ளுவோம். இது எங்கள் கைத்தொழிலில் உயர் உற்பத்தி கொள்ளளவைப் பெறுவதை உறுதிப்படுத்தும். இந்த தானியங்கி இயந்திர பயன்பாடு உற்பத்தி விலையைக் குறைப்பது மற்றும் உற்பத்தி நடவடிக்கையின் வினைத்திறனை அதிகரிப்பதன் மூலம் உள்ளூர் உற்பத்தியை நேர்த்தியாகப் பூர்த்திசெய்தல் என்பவற்றின் மூலம் கைத்தொழிலுக்கு பெரிதும் நன்மையளிக்கும். இதை பரீட்சார்த்த நிலையாமாக மாற்றுவது எமது நோக்கமாகும். இந்த நிலையத்தின் அபிவிருத்தியில் நான் தனிப்பட்ட முறையில் தலையிடுவேன். எதிர்கால சுபீட்சத்திற்கு சிறந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாம் இந்த நிலையத்தின் மீது முதலீடு செய்ய வேண்டியுள்ளது."
இந்த தானியங்கி இயந்திர பயன்பாட்டுக்கான அதிசிறந்த நிலையத்தை பரீட்சார்த்த நிலையமாக மாற்றுவதன் மூலம் எமது எதிர்கால சந்ததியினரின் பிள்ளைகளுக்கு இந்த தொழில்நுட்பத்தை சுற்றி கூடுவதற்கு சந்தர்ப்பம் கிட்டுவதோடு, இளைஞர்களுக்கு அவர்களின் அறிவை விருத்திசெய்துகொள்ள முடியும். மேலும் பாரிய உற்பத்தி கொள்ளவை எதிர்பார்க்கின்ற கைத்தொழிலாளார்களுக்கு அவர்களை அடுத்த தொழில்நுட்ப கட்டத்திற்கு உயர்த்துவதற்கு ஒரு மேடை உருவாக்கிக் கொடுக்கப்படும். அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. சமன் பெரேரா, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இணைப்பாக்க செயலகத்தின் அலுவலர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.