503A2616திறன்விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கௌரவ இராஜாங்க அமைச்சர் டாக்டர் (திருமதி) சீதா அரம்பேபொல, அமைச்சின் கீழ் இயங்குகின்ற இலங்கை கோள்மண்டலத்திற்கு விஜயம் மேற்கொண்டார். நாட்டில் வானியல் விடயம் தொடர்பாக ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக நவீன தொழில்நுட்பத்தின் வழியாக கோள்மண்டலத்தை விருத்திசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், அது புதிய அறிவைப் பெறுவதற்கும் புதிய பரிமாணத்தைக் கண்டறிவதற்கும் உதவும் எனத் தெரிவித்தார்.

மேலதிக புகைப்படங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும் >>>

503A2458மக்களைப் பாதிக்கின்ற பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கு விஞ்ஞான ரீதியான   ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அவற்றிற்குத் தீர்வு காண வேண்டும் என திறன்விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கௌரவ இராஜாங்க அமைச்சர் டாக்டர் (திருமதி) சீதா அரம்பேபொல தெரிவித்தார். அண்மையில் மாலபேயில் அமைந்துள்ள கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்திற்கு (ITI) விஜயம் மேற்கொண்டபோது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தனது விஜயத்தின்போது, அமைச்சர் நிறுவனம் மேற்கொள்ளுகின்ற ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கும் புதிய ஆராய்ச்சி அறிவின் ஊடாக உற்பத்தி செய்யப்பட்டுள்ள பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளுக்கும் விசேட கவனம் செலுத்தினார். சீன-இலங்கை ஓருங்கிணைக்கப்பட்ட உயிரியல் தொழில்நுட்ப ஆய்வுகூட கருத்திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி வளாகத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற மூலிகை மருத்துவ ஆய்வுகூடத்தின் இறுதி கட்ட நிர்மாண பணிகள் அமைச்சரின் பங்கேற்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து உரை நிகழ்த்திய அமைச்சர், "எமது ஆராய்ச்சி நிறுவகத்தின் விஞ்ஞானிகள் தளராத ஊக்கத்துடன் விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள். அத்தகைய ஆராய்ச்சியின் ஊடாகப் பெற்ற அறிவு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கும் எந்தளவுக்கு பங்களிப்புச் செய்துள்ளது என்பதைப் பரிசோதிக்க வேண்டியது அவசியமாகும். இந்த ஆராய்ச்சியின் இலக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வை வழங்குவதாக இருக்க வேண்டும்." எனத் தெரிவித்தார்.

மேலும் "இதற்காக, அமைச்சின் கீழுள்ள அனைத்து ஆராய்ச்சி நிறுவகங்களும் சிறந்த இணைப்பாகத்துடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் இணைந்து செயலாற்ற வேண்டியது முக்கியமாகும். இது ஆராய்ச்சியின் ஊடாக பொதுப் பிரச்சினைக் தீர்வு காண்பதை இலகுபடுத்தும். அமைச்சின் கீழுள்ள அனைத்து ஆராய்ச்சி நிறுவகங்களையும் ஒரு மேசைக்கு கொண்டு வந்து அவர்களுடன் கலந்துரையாடுவதற்கு நான் ஒழுங்கு செய்வேன். நிறுவகங்களுக்கிடையில் அறிவைப் பகிர்ந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகும். சில நேரங்களில் ஒரேவிதமான ஆராய்ச்சிகள் வெவ்வேறு நிறுவகங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இது நேரத்தையும் பணத்தையும் வீணாக்குவதாகும். அதனால் ஒரு நிறுவகம் மேற்கொள்ளுகின்ற ஆராய்ச்சியை இன்னுமொரு நிறுவகமும் மேற்கொள்ள விரும்பினால் முதல் நிறுவகம் நிறுத்திய இடத்திலிருந்து அடுத்த நிறுவகம் தொடர்வது நல்லது என்பது எனது கருத்தாகும்." எனவும் கூறினார்.

ஆராய்ச்சியின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்ட புதிய அறிவின் மூலம் ஓர் உற்பத்தி உருவாக்கப்படுமானால், அதை வர்த்தகமயப்படுத்தி பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு சென்றடையச்செய்ய முடியும். பலதரப்பட்ட பொறுப்புமுயற்சியாளர்களை ஈடுபடுத்தி ஒரு கைத்தொழில் வலையமைப்பை உருவாக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

"ஏனெனில் இலங்கை பெறுமதியான மருத்துவ மூலிகைகள் செறிந்துள்ள நாடாகும், எனவே உள்ளூர் மருத்துவ மூலிகைகளை உயர் தொழில்நுட்பத்தின் ஊடாக பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளாக மாற்ற முடியும்" என கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் (ITI) தலைவர் டாக்டர் சிறிமல் பிரேமகுமார கூறினார்.

மேலதிக புகைப்படங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும் >>>

11 1டாக்டர் சீத்தா அரம்பேபொல, திறன் விருத்தி, வாழ்க்கைத் தொழிற்பயிற்சி கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் கௌரவ இராஜாங்க அமைச்சர், டாக்டர் சீத்தா அரம்பேபொல, இலங்கை-ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் (CGTTI) அதன் சேவைகளை நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களுக்கு விரிவுபடுத்துவதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், இந்த நோக்கத்திற்குத் தேவைப்படுகின்ற மூலோபாய விடயங்கள் மற்றும் கொள்கைகள் என்பவற்றை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றிய அறிக்கையை விரைவாக சமர்க்கும்படி நிறுவகத்தின் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். நேற்று (18.08.2020) இரத்மலாண இலங்கை-ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகத்தைப் பார்வையிட சென்றபோது அமைச்சர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.

நிறுவக ரீதியான பிரச்சினைகளுடன் நிறுவகத்தின் மாணவர்களின் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி சம்பந்தமாக உள்ள பிரச்சினைகளைப் பற்றியும் அமைச்சர் கதைத்தார். அத்துடன் இதன் சேவைகளை நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களுக்கு விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

“திறன் விருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி என்பவற்றுடன் சம்பந்தப்பட்ட பல தெளிவான இலக்குகள் எமக்குத் தரப்பட்டுள்ளன. இந்த நிறுவகத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாங்கள் இந்த இலக்குகளை அடைய வேண்டும். அதனால் இந்த நிறுவகம் நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். குறிப்பாக, இந்த நிறுவகத்திற்கான கிராக்கி அதிகரிக்கப்பட வேண்டும். அதற்காக, பாடசாலையிலிருந்து வெளியேறி திறமைகளின்றி சமூகமயமாகியுள்ள இளைஞர்களைக் கவர்வதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.

பிராந்திய வேறுபாடுகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப கொள்கைகளைத் தயாரிப்பது மற்றும் மீளாய்வுசெய்வது என்பவற்றுடன் அதற்கு அமைவாக நாட்டின் பல்வேறு மாகாணங்களுக்கு அவற்றைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப்பற்றியும் அறிக்கையொன்றை விரைவாக சமர்பபிக்கும்படி அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

கேலரியைக் காண இங்கே கிளிக் செய்க >>

 

திறன் விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் அமைச்சர் டாக்டர் சீத்தா அரம்பேபொல இன்று (24.08.2020) கொவிட் 19 வைரசினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மார்பு அழுத்த இயந்திரத்தை இன்று (24.08.2020) பார்வையிட்டார். இந்த இயந்திரம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட இறுதி வருட மாணவன் திரு. டில்சான் அபேவர்தனவினால் வடிவமைக்கப்பட்டு அமைச்சரின் மேற்பார்வைக்கு கொண்டுவரப்பட்டது.

கொவிட் 19 வைரஸ் வேகமாகப் பரவிக்கொண்டிருந்த அண்மைக் காலப்பகுதியில் அதன் கட்டுப்பாடு, ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை என்பவற்றிற்காக நாட்டில் சுமார் 780 புத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டன. சில மாதங்களுக்கு முன்னர் இந்த MCPR இயந்திரத்திற்கு ஆக்கவுரிமை பெற்றுக்கொண்டதன் பின்னர் இந்த விடயத்தை திரு. டில்சான் அபேவர்தன டாக்டர் சீத்தா அரம்பேபொல அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். திருமதி அரம்பேபொல இந்த இயந்திரத்தில் மேம்படுத்த வேண்டிய சில விசேட அம்சங்களை சுட்டிக்காட்டினார். அதற்கு அமைவாக தேசிய மருந்தாக்கற் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபை (NMRA) மற்றும் கொழும்பு மருத்துவபீடத்தின் பேராசிரியர்கள் குழாம் ஆகியோர் கூட்ணைந்து இந்த இயந்திரம் மேம்படுத்தப்பட்டது. தற்பொழுது TOS லங்கா நிறுவனத்தின் கூட்டிணைவுடன் இந்த இயந்திரம் வணிகமயமாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் புத்தாக்கத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் மேம்படுத்தப்பட்ட MCPR இயந்திரத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் பார்வையிட்டார்.

இத்தகைய இயந்திரமொன்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு சுமார் ரூ. 48 இலட்சம் செலவாகும் எனவும் இந்த இயந்திரத்தை ரூ. 2.5 மில்லியனுக்கு இலங்கையில் தயாரிக்க முடியம் எனவும் திரு. டில்சான் அபேவர்தன தெரிவித்தார். மேலும் இந்த பெறுமதி மிக்க வணிக இயந்திரத்தை உருவாக்குவதற்கு டாக்டர் சீத்தா அரம்பேபொல அவர்கள் வழங்கிய ஊக்கமும் புத்தாக்கத் திறமையும் தனக்கு பெரும் உதவியாக அமைந்தது என அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் உரை நிகழ்த்திய அமைச்சர் இந்த இயந்திரத்தின் விருத்தியைப் பாராட்டியதோடு, தற்போதைய அரசாங்கம் எதிர்காலத்தில் இத்தகைய புத்தாக்கங்களுக்கு தொடர்ச்சியாக தேவையான ஒத்துழைப்பை நல்கி வழிகாட்டும் எனவும் தெரிவித்தார்.

001 002 004

04திறன் விருத்தி, வாழ்க்கைத் தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் கௌரவ அமைச்சர் டாக்டர் சீத்தா அரம்பேபொல அவர்கள் தனது அமைச்சில் 2020 ஆகஸ்ட் 14ஆம் திகதி உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து பத்தரமுல்ல, செத்சிறிபாயவில் அமைந்துள்ள ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க பிரிவு உத்தியோகத்தர்களுடன் அமைச்சின் விடயப்பரப்பு மற்றும் எதிர்கால திட்டங்கள் என்பவை பற்றிய விசேஷ கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தினார். கூட்டத்தில் உரை நிகழ்த்திய கௌரவ அமைச்சர்,

"இந்த நாட்டின் அடுத்த தசாப்தம் ஏற்கனவே இந்த அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது இந்த நாட்டின் எதிர்காலத்தையும் அது எங்கே போகும் என்பதையும் தீர்மானிக்கும் தனித்துவமான அமைச்சாகும். மேலும், அடுத்த தசாப்தம் திறன்களை விருத்திசெய்யும் தசாப்தமாகும் என ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த நோக்கை யதார்த்தமாக்கிக் கொள்ளுவதற்கு இந்த அமைச்சையும் உங்களுடைய தொழில் திறனையும் நான் நெறிப்படுத்துவேன். உற்பத்தித் திறன்மிக்க பிரசைகள் மகிழ்ச்சியாக வாழ்கின்ற குடும்ப ஒழுக்கமுள்ள சமுதாயத்தின் ஊடாக செழிப்புமிக்க நாடொன்றைக் கட்டியெழுப்பும் பொறுப்பு எமக்குண்டு. அத்துடன் கல்வியின் ஊடாக செழிப்புமிக்க தேசம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு சரியான நோக்கில் பூரண திறன் விருத்தியுள்ள மற்றும் வாழ்க்கைத் தொழிற் பயிற்சியுள்ள உற்பத்தித் திறன்மிக்க இளைஞர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதும் எமது பொறுப்பாகும்." எனத் தெரிவித்தார்.

தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சின் முன்னாள் செயலாளர் திரு. சிந்தக லொகுஹெட்டி, திறன் விருத்தி, வாழ்க்கைத் தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர்கள் திருமதி. நந்தனி சமரவிக்கிரம, திரு. சமன் பெரேரா மற்றும் திருமதி. தீபா லியனகே ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கேலரியைக் காண இங்கே கிளிக் செய்க >>