உயர் கல்வி, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சின் கீழ் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தினால் (ஐவுஐ) ஒழுங்குசெய்யப்பட்ட நான்காவது பையனியல் ஆராய்ச்சி கருத்தரங்கு 2019.12.17ஆம் திகதி மாலபேயில் அமைந்துள்ள கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வை கௌரவ உயர் கல்வி, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் திரு. பந்துல குணவர்தன, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க கௌரவ இராஜாங்க அமைச்சர் திரு.திலங்க சுமதிபால ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர். 'நிலைபேறான அபிவிருத்திக்கு அதிசிறந்த விஞ்ஞானம், தொழில்நட்பம் மற்றும் புத்தாக்கம்' என்பது இந்த வருட மகாநாட்டின் தொனிப்பொருளாகும். மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரங்கிக ஹல்வத்துர மகாநாட்டின் பிரதான உரையை நிகழ்த்தினார். மேலும் இந்த மகாநாட்டில் விசேட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, புதிய அறிவை சமூகமயப்படுத்திய மற்றும் தேசிய மட்டத்தில் விருதுகளை வென்ற கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சிந்தக லொகுஹெட்டி, மேலதிக செயலாளர் திருமதி. நந்தனி சமரவிக்கிரம, தெற்கில் நிலைபேறான அபிவிருத்திக்கான விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்பற்றிய ஆணைக்குழவின் நிறைவேற்று பணிப்பாளர் (ஊழுஆளுயுவுளு) கலாநிதி சைதி ஜூனைட், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் பதிற் கடமையாற்றும் தலைவர் திருமதி. சுரெகா ஹேவகே, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ராதிகா சமரசேகர ஆகியோர் உட்பட பெருந்திரளானோர் இந் கிகழ்வில் கலந்துகொண்டனர்.

1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1

இலங்கைக்கும் கொரிய குடியரசுக்கும் இடையிலான பொருத்தமான தொழில்நுட்ப அபிவிருத்தி கருத்திட்டம் மிக வெற்றிகரமாக நிறைவடைந்ததை முன்னிட்டு பத்தரமுல்ல வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் 2019.12.10ஆம் திகதி இலங்கைக்கான கொரிய தூதுவர் திரு. லீ ஹியோங அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற நிறைவு வைபவத்தில் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் திலங்க சுமதிபால பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

 

விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழ் இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்தினால் (SLSI) ஒழுங்குசெய்ப்பட்ட 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளுக்கான அதிசிறப்புக்கான தேசிய தரப்படுத்தல் விருது வழங்கும் விழா தாமரை தடாக தேசி அரங்கத்தில் மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்; விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுஜீவ சேனசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

'இலங்கையை தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றமடைந்த நாடாக மாற்றுவதற்கு நிபுணர்களின் அறிவு பயன்படுத்தப்படும்'- அமைச்சர் திலங்க சுமதிபால.

விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழ் தேசிய ஆராய்ச்சி பேரவையினால் (NRC) ஏற்பாடு செய்யப்பட்ட விஞ்ஞான வெளியீடுகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கும் விழா 2011.09.26 அன்று கொழும்பு தாஜ் சமுத்திர ஹோட்டலில் மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுஜீவ சேனசிங்க அவர்களின் பங்றே;புடன் நடைபெற்றது.