கண்காட்சி தொடரின் முதல் கண்காட்சியாக, சில்பசேனா கண்காட்சி, விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியை நிரப்புவதற்கு பாலமாக அமைவதை நோக்கமாகக் கொண்டு கௌரவ சுஜீவ சேனசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் யூலை 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்டது.

ராவணா-1, இலங்கை விண்வெளி ஆராய்ச்சி துறையில் பிரவேசிப்பதைக் குறிக்குமுகமாக ஜப்பான், கியுசு தொழில்நுட்ப நிறுவகத்தின் உதவியுடன் நவீன தொழில்நுட்பத்திற்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவகத்;தின் (ACCIMT) இரண்டு ஆராய்ச்சி பொறியியலாளர்களால் விருத்திசெய்யப்பட்ட நெனோ செய்மதி 17.06.2019 அன்று பி.ப.3.45 மணிக்கு (இலங்கை நேரப்படி) சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளியில் 400 கிமீ தொலைவிற்கு ஏவப்பட்டது.

ஜனாதிபதி சட்டத்தரணி திசாத் விஜேகுணவர்தன விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜீவ சேனசிங்க அவர்களின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விஞ்ஞான தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சிற்கும் மற்றும் கரு பௌதீகத்திற்கான ஐரோப்பிய அமைப்பாண்மைக்குமிடையில் கைச்சாத்திடப்பட்;ட சர்வதேச கூட்டுறவு உடன்படிக்கையினைத் தொடர்ந்து விஞ்ஞான, தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் செயலாளரான திரு. சிந்தக எஸ். லொக்குஹெட்டி அவர்கள், சுவிட்சர்லாந்தில் ஜெனிவா எனுமிடத்திலுள்ள CERN இற்கு 2019.ஜூன் மாதம் 16-17 திகதிகளில் விஜயம் செய்தார்.

பாதுகாப்புத் தரப்புக்கு அமைவாக, 2019 ஏப்பிறல் 21ஆம் திகதி நாட்டின் பல பாகங்களில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் புதிய வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வு விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.