பேராசிரியர் சமன் செனவீர 2018 யூன் 4ஆம் திகதி NIFSஇன் பணிப்பாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார். இவர் தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருக்கின்றார். அத்துடன், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்திலும் இலங்கையின் றுகுணு பல்கலைக்கழகத்திலும் இணை பேராசிரியராக கடமையாற்றுகின்றார். இவர் 1990 முதல் 1992 வரை அடிப்படை கற்கைகளுக்கான நிறுவனத்தில் கனிஷ்ட துணை ஆராய்ச்சியாளராக இருந்தார். அவரை சிறந்த ஆராய்ச்சியாளராக பயிற்றுவித்த நிறுவனத்தை உயர்த்துவதற்கு தன்னை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் அவுஸ்திரேலியாவின் ஆடம்பர வாழ்க்கையைக் கைவிட்டு இலங்கைக்கு வரத் தூண்டியது. அவர் அவுஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளில் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் மனிதவள முகாமைத்துவம் என்பவற்றில் 25 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம் வாய்ந்தவராகத் திகழ்கின்றார்.
பேராசிரியர் சமன் அவர்களின் ஆராய்ச்சி பயிர்கள் மற்றும் புல்தரைகள் என்பவற்றின் மீது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் காலநிலை மாற்றத்தை தணிப்பதற்கு மூலோபாய மாற்றங்களை விருத்திசெய்தல் என்பவற்றில் கவனம் செலுத்தியது. அவர் இயற்கை மற்றும் விஞ்ஞானம் உட்பட 200க்கு மேற்பட்ட (SCI சஞ்சிகைகளில் 70) ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுளார். அவருடைய ஆராய்ச்சி கட்டுரைகளில் 80%க்கு மேற்பட்டவைகள் வான்கோள்களுடன் தொடர்புடைய முன்னணி சஞ்சிகைகளில் (A/A*) வெளியிடப்பட்டுள்ளன.
விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சிஇ திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழில்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம 2018 யூன் 8ஆம் திகதி NSBM பசுமை பல்கலைக்கழக நகரத்தின் தொடக்க விழாவுக்கு விஜயம்செய்தார்.
கௌரவ அமைச்சர் NSBM தலைவர் திரு. பி. ரணேபுர மற்றும் உபவேந்தர் கலாநிதி ஈ.ஏ.வீரசிங்க ஆகியோரால் வரவேற்கப்பட்டார். NSBM கேட்போர்கூடத்தில் ஒரு சிறு ஒன்றுகூடல் நடைபெற்றது. அதன்போது NSBM கருத்திட்டத்தின் முன்னேற்ற அறிக்கை கலாநிதி ஈ.ஏ.வீரசிங்க அவர்களால் கௌரவ அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. மேலும் NSBM பசுமை பல்கலைக்கழக நகரம் 21ஆம் நூற்றாண்டின் பாடசாலை பிள்ளகளின் அபிவிருத்திக்குப் பொருந்தக்கூடியவகையில் 'சத்துர்வித மங் பெத்' (நால்வகை வழிகள்) என்ற அகில இலங்கை நிகழ்ச்சித்திட்டத்தைச் சமர்ப்பித்தது.
அமைச்சர் அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு மேற்கொண்ட இவ்விஜயத்தின்போது NSBM இன் தகவல் தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் வியாபார ஆய்வு மையம் என்பன அமைச்சர் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. மேலும் 99X டெக்னொலஜி லிமிட்டட், ஒமோபயோ பிரைவேட் லிமிட்டட் மற்றும் கிறியேடிவ் டெக்னொலஜி சொலுசன் பிரைவேட் லிமிட்டட் ஆகிய மூன்று கம்பெனிகள் அராய்ச்சி நிலையத்தில் பயிற்சிகளை ஆரம்பித்ததன் ஊடாக தமது செயற்பாடுகளை ஆரம்பித்தன.
மேலும் NSBM இன் பட்டதாரி மாணவர்களின் தொழில்சார் தகைமைகளை முன்னேற்றுவதற்காக சலுகை அடிப்படையிலான நன்மைகளை வழங்குவதற்கும் சரியான வழிமுறைகளைக் காட்டுவதற்கும் NSBM பட்டய முகாமைத்துவ கணக்காளர்களின் நிறுவகத்துடனும் (CIMA-Sri Lanka) ACCA Sri Lanka வுடனும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளைப் பரிமாறிக்கொண்டது.
கௌரவ அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம NSBM வழங்குகின்ற சேவையைப் பாராட்டியதோடு, தாம் அதன் சேவைகளைக் கண்டு மிகவும் திருப்தியடைவதாகத் தெரிவித்தார். மேலும் இந்த விசேட நிகழ்வை சிறப்பிக்குமுகமாக மர நடுகை நிகழ்விலும் கலந்துகொண்டார். அமைச்சரின் வருகையைக் கௌரவிக்குமுகமாக கலாநிதி ஈ.ஏ.வீரசிங்க அவர்களால் அமைச்சருக்கு ஒரு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழில்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் செயலாளர் திருமதி. சந்தியா விஜேபண்டார, NSBM இன் பிரதி உப வேந்தர் திரு. சமிந்த ரத்நாயக்க உள்ளிட்ட NSBM இன் கல்விசார்ந்த மற்றும் கல்விசாரா அங்கத்தினர்களும் சிறப்பு அதிகதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றிய உதய ஆர். செனெவிரத்ன தனது பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். 37 வருடங்களுக்கு மேலாக அரச சேவையில் செயலாற்றிய அனுபவம்வாய்ந்த உத்தியோகத்தரான அவர் இதற்கு முன்னர் விளையாட்டுத்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு, சூழல் மற்றும் மகாவலி அபிவிருத்தி போன்ற அமைச்சுகளிலும் நிரந்தர செயலாளராகச் செயலாற்றியுள்ளார்.
பொல்கொல்ல கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தை அமைப்பதில் தலைமையேற்று செயலாற்றிய செனெவிரத்ன அவர்கள் தனது சேவைக் காலத்தில் அதற்கு சமமான பாரிய அரச கருத்திட்டங்கள் பலவற்றிற்கு தலைமை தாங்கியுள்ளார்.
விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் பதவியில் கடமையாற்றிய குறுகிய காலப்பகுதியில் நாட்டின் அபிவிருத்திக்காக விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க துறையின் முன்னேற்றத்திற்காக தனித்துவமான பல கருத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கும் அவர் முன்னணியில் நின்று செயலாற்றியுள்ளார்.
இலங்கை மாதாவுக்கு நீண்ட காலம் தனது உழைப்பை, அறிவை அர்ப்பணித்து ஓய்வுபெற்றுள்ள உதய ஆர். செனெவிரத்ன அவர்களுக்கு எதிர்காலத்திலும் நாட்டுக்குப் பயனுள்ள சேவைகளை வழங்குவதற்கு சக்தியும் தைரியமும் ஆரோக்கியமான நலனும் கிட்டுக என விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறது.
![]() |
![]() |
விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் அமைச்சர் டாக்டர். சரத் அமுனுகம, 16ம் திகதி காலை பத்தரமுல்ல செத்சிரிபாயவில் உள்ள தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். அமைச்சுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட அமைச்சின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சில் புதிய செயலாளராகப் பதவியேற்ற திருமதி சந்தியா விஜயபண்டார, அண்மையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். அமைச்சு உத்தியோகத்தர்கள், இணைந்த நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரின் பங்கேற்பில் கடமையேற்பு வைபவம் பத்தரமுல்ல செத்சிறிபாயவில் அமைந்துள்ள விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சில் இடம்பெற்றது.
புதிய பதவியை ஏற்ற திருமதி. விஜயபண்டார கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சில் இராஜாங்க செயலாளர் பதவியில் செயலாற்றினார்.
இதற்கு முன்னர், கல்வி, சூழல், மின், வலுசக்தி, பெற்றோலிய அபிவிருத்தி போன்ற அமைச்சுகள் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களில் கடமையாற்றியுள்ள திருமதி சந்தியா விஜயபண்டார இலங்கை நிருவாக சேவையில் விசேட தரத்தில் சிரேஷ்ட உத்தியோகத்தராவார்.
பரிபூரணமான அனுபவங்களைக் கொண்டுள்ள அரச உத்தியோகத்தரான புதிய செயலாளருக்கு விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறது.
![]() |
![]() |
செய்தி மற்றும் நிகழ்வுகள்
- Launch of the First Workshop under the India–Sri Lanka Joint Workshop Programme 2024
- "V-Pramithi" National Programme Launched for Consumer Safety
- Inauguration of National Integrity Week: Ministry of Science and Technology Takes the Integrity Pledge
- Agreements Signed for Indo-Sri Lanka Joint Research Programme








