செய்தி மற்றும் நிகழ்வுகள்
About Us
நோக்கு
விஞ்ஞானம்,தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக அபிவிருத்தி அடைந்த ஒரு தேசம்.
பணி
நிலையான அபிவிருத்தி கட்டமைப்பிற்குள் தேசிய மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு ஏற்புடைய பொருளாதார வளர்ச்சியை,தூண்டக்கூடிய வகையில் பயனுறுதி மிக்க விஞ்ஞான,தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க சுற்றுச் சூழல் அமைப்பை உருவாக்குதல்.
அமைச்சின் நோக்கம்
- தரங்களும் தத்துவமளித்தலும்
- தொழில்நுட்ப மாற்றுகை மற்றும் வர்த்தகமயமாக்குதல்
- கிராக்கியை நோக்கிச்செல்லுகின்ற ஆய்வை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளுதல்
- விஞ்ஞான புதுமைகளையும் தொழில்நுட்பங்களையும் ஜனரஞ்சகப்படுத்துதல்
விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆய்வு அமைச்சு கிராக்கியை நோக்கிச்செல்லுகின்ற ஆய்வு, ஆய்வு வர்த்தகமயம், கண்டுபிடிப்புகளையும் புத்தாக்கங்களையும் மேம்படுத்துதல், தரப்படுத்தலுக்கும் சான்றுப்படுத்தலுக்கும் வசதியேற்படுத்தல் என்பவற்றில் ஈடுபடுவதற்கு அரச ஆய்வு நிலையங்களுக்கு விசேடமாக வழிகாட்டுவதன் ஊடாக தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றது. இந்தப் பணியை நிறைவேற்றுமுகமாக, ஆய்வு, ஆய்வுக்கு நிதியுதவியளித்தல், மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகள் என்பவற்றுக்கிடையில் தொடர்பை ஏற்படுத்துவதற்கு அமைச்சு ஆகக்கூடிய முன்னுரிமையளித்து செயலாற்றுகின்றது.
மாண்புமிகு சனாதிபதி அவர்களால் அரசியலமைப்பின் 44 (1) (அ) உறுப்புரையின் கீழ் செயற்பாடுகள் மற்றும் ஒப்படைக்கப்பட்ட விடயங்களுக்கான நிபந்தனைகள் தொடர்பாக 2015ஆம் ஆண்டின் செப்டம்பர் 21ஆம் திகதியிட்ட 1933/13ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக, விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆய்வு அமைச்சாருக்கு பின்வரும் செயற்பாடுகளும் விடயங்களும் ஒப்படைக்கப்படுகின்றது.
- விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆய்வு என்பவற்றுடன் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கும் மேலும் அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட நிறுவகங்கள், திணைக்களங்கள் என்பவற்றின் விடயப்பரப்பெல்லையின் கீழ் வருகின்ற விடயங்களுக்கும் கொள்கைகள், நிகழ்ச்சித்திட்டங்கள், கருத்திட்டங்கள் என்பவற்றை உருவாக்குதல் கண்காணித்தல் மற்றும் மதிப்பீடுசெய்தல்.
- சர்வதேச ரீதியாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப துறைகளில் நடத்தப்படுகின்ற ஆய்வுகள் ஊடாக கண்டுபிடிக்கப்படுகின்ற புதிய கண்டுபிடிப்புகள் வரிசையில் சேர்பதற்கு உள்நாட்டு ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் என்பவற்றுக்கான தேவையான வசிதிகளை வழங்கல்.
- விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளுதல்
- தரப்படுத்தலையும் நிர்வாகத்தையும் ஸ்தாபிப்பதனுடன் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள்
- அமைச்சின் விடயப்பரப்பெல்லையின் கீழ் ஆய்வு நிறுவகங்களால் நடத்தப்படுகின்ற ஆய்வு நிகழ்ச்சித்திட்டங்களுக்கு தொழில்நுட்ப உதவி வழங்குவதற்கான ஏற்பாடு
- புதிய கண்டுபிடிப்புகள்பால் சமூகத்தை செயலூக்கப்படுத்துவதற்கும் அதற்கு வழிகாட்டுவதற்கும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளுதல்
- நிர்மாண கைத்தொழிலை விருத்திசெய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் ஆய்வுகளை அமுலலாக்குதல்
- அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவகங்களுக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ள ஏனைய அனைத்து விடயங்களுடன் தொடர்புடைய விடயங்கள்
- அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களை மேற்பார்வைசெய்தல்
பிரிவுகள்
நிறுவனங்கள்
- நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்தர். சி. கிளார்க் நிறுவகம்
- தேசிய அடிப்படை கற்கைகள் நிறுவகம்
- தேசிய எந்திரவியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம்
- தேசிய ஆராய்ச்சி மன்றம்
- தேசிய விஞ்ஞான மன்றம்
- இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு
- தேசிய கண்டுபிடிப்பு நிறுவனம் (NIA)